THIRUVARUTPA

அருட்பெருஞ்சோதி அகவல்

நிலைமண்டில ஆசிரியப்பா

திருச்சிற்றம்பலம்

Download Agaval –  ±Agaval.pdf

1              அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி                                                2
2              அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ் அருட்சிவ பதியாம் அருட்பெருஞ் ஜோதி                                             4
3              ஆகம முடிமேல் ஆரண முடிமேல் ஆகநின்று ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி                                                                    6
4              இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய் அகமறப் பொருந்திய அருட்பெருஞ் ஜோதி                          8
5              ஈனமின்றி இகபரத்து இரண்டின்மேற் பொருளாய் ஆனலின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி                          10
6              உரைமனம் கடந்த ஒருபெரு வெளிமேல் அரைசுசெய் தோங்கும் அருட்பெருஞ் ஜோதி                                          12
7              ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும் ஆக்கமும் அருளிய அருட்பெருஞ் ஜோதி               14
8              எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்திஎன் அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி               16
9              ஏறா நிலைமிசை ஏற்றிஎன் தனக்கே ஆறாறு காட்டிய அருட்பெருஞ் ஜோதி 18
10           ஐயமும் திரிபும் அறுத்தெனது உடம்பினுள் ஐயமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி    20
11           ஒன்றென இரண்டென ஒன்று  இரண்டென இவை அன்றென விளங்கிய அருட்பெருஞ் ஜோதி               22
12           ஓதா துணர்ந்திட ஒளிஅளித்து எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி            24
13           ஔவியம் ஆதிஓர் ஆறுந் தவிர்த்தபேர் அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ் ஜோதி   26
14           திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும்ஓர் அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ் ஜோதி               28
15           சுத்தசன் மார்க்கச் சுகத்தனி வெளிஎனும் அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                30
16           சுத்தமெய்ஞ் ஞானச் சுகோதய வெளிஎனும் அத்து விதச்சபை அருட்பெருஞ் ஜோதி                 32
17           தூய கலாந்தச் சுகந்தரு வெளிஎனும் ஆயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி             34
18           ஞானயோ காந்த நடத்திரு வெளிஎனும் ஆனியில் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி    36
19           விமல போதாந்தமா மெய்ப்பொருள் வெளிஎனும் அமலசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி               38
20           பெரிய நாதாந்தப் பெருநிலை வெளிஎனும் அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி                 40
21           சுத்தவே தாந்தத் துரியமேல் வெளிஎனும் அத்தகு சிற்சபை அருட்பெருஞ் ஜோதி     42
22           சுத்தசித் தாந்தச் சுகப்பெரு வெளிஎனும் அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                 44
23           தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளிஎனும் அகர நிலைப்பதி அருட்பெருஞ் ஜோதி                 46
24           தத்துவா தீதத் தனிப்பொருள் வெளிஎனும் அத்திரு அம்பலத் தருட்பெருஞ் ஜோதி 48
25           சச்சிதா னந்தத் தனிப்பர வெளிஎனும் அச்சியல் அம்பலத் தருட்பெருஞ் ஜோதி        50
26           சாகாக் கலைநிலை தழைத்திடு வெளிஎனும் ஆகா யத்தொளிர் அருட்பெருஞ் ஜோதி                 52
27           காரண காரியம் காட்டிடு வெளிஎனும் ஆரணச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி         54
28           ஏகம் அனேகம் எனப்பகர் வெளிஎனும் ஆகமச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி            56
29           வேதாக மங்களின் விளைவுகட் கெல்லாம் ஆதார மாம்சபை அருட்பெருஞ் ஜோதி                 58
30           என்றா தியசுடர்க்கு இயனிலை ஆய்அது அன்றாம் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி                 60
31           சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையுந் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி                 62
32           முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்தருள் அச்சுட ராம்சபை அருட்பெருஞ் ஜோதி                 64
33           துரியமும் கடந்த சுக பூரணந்தரும் அரிய சிற்றம்பலத் தருட்பெருஞ் ஜோதி 66
34           எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்தருள் அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி               68
35           இயற்கைஉண் மையதாய் இயற்கைஇன் பமுமாம் அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி           70
36           சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை வாக்கிய சிற்சபை அருட்பெருஞ் ஜோதி         72
37           சுட்டுதற் கரிதாம் சுகாதீத வெளிஎனும் அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி 74
38           நவந்தவிர் நிலைகளும் நண்ணும்ஓர் நிலையாய் அவந்தவிர் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி               76
39           உபயபக் கங்களும் ஒன்றெனக் காட்டிய அபயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி                 78
40           சேகரமாம் பல சித்தி நிலைக்கெலாம் ஆகரமாம் சபை அருட்பெருஞ் ஜோதி              80
41           மனாதிகட் கரிய மதாதீத வெளியாம் அனாதிசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி 82
42           ஓதிநின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம் ஆதிசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி               84
43           வாரமும் அழியா வரமும் தரும் திரு ஆரமுதாம் சபை அருட்பெருஞ் ஜோதி    86
44           இழியாப் பெருநலம் எல்லாம் அளித்தருள் அழியாச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                 88
45           கற்பம் பலபல கழியினும் அழிவுறா அற்புதம் தரும்சபை அருட்பெருஞ் ஜோதி          90
46           எனைத்தும் துன்பிலா இயல்அளித்து எண்ணிய அனைத்தும் தரும்சபை அருட்பெருஞ் ஜோதி               92
47           பாணிப் பிலதாய்ப் பரவினோர்க்கு அருள்புரி ஆணிப் பொன்னம்பலத் தருட்பெருஞ் ஜோதி               94
48           எம்பலம் எனத்தொழுது ஏத்தினோர்க்கு அருள்புரி அம்பலத் தாடல்செய் அருட்பெருஞ் ஜோதி               96
49           தம்பர ஞான சிதம்பரம் எனும்ஓர் அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி   98
50           எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ் ஜோதி               100
51           வாடுதல் நீக்கிய மணிமன் றிடையே ஆடுதல் வல்ல அருட்பெருஞ் ஜோதி      102
52           நாடகத் திருச்செயல் நவிற்றிடும் ஒருபேர் ஆடகப் பொதுஒளிர் அருட்பெருஞ் ஜோதி                 104
53           கற்பனை முழுவதும் கடந்தொளி தரும்ஓர் அற்புதச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                 106
54           ஈன்றநற் றாயினும் இனிய பெருந்தயவு ஆன்றசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி                 108
55           இன்புறு நான்உளத்து எண்ணியாங்கு எண்ணியாங்கு அன்புறத் தருசபை அருட்பெருஞ் ஜோதி            110
56           எம்மையும் என்னைவிட்டு இறையும் பிரியாது அம்மை அப்பனுமாம் அருட்பெருஞ் ஜோதி               112
57           பிரிவுற்று அறியாப் பெரும் பொருளாய் என் அறிவுக் கறிவாம் அருட்பெருஞ் ஜோதி                 114
58           சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அனாதியாம் அருட்பெருஞ் ஜோதி 116
59           தனுகர ணாதிகள் தாம் கடந்து அறியும்ஓர் அனுபவம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி 118
60           உனும்உணர் உணர்வாய் உணர்வெலாம் கடந்த அனுபவா தீத அருட்பெருஞ் ஜோதி                 120
61           பொது உணர் உணரும் போதலால் பிரித்தே அதுஎனில் தோன்றா அருட்பெருஞ் ஜோதி                 122
62           உளவினில் அறிந்தால் ஒழியமற் றளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ் ஜோதி                 124
63           என்னையும் பணிகொண்டு இறவா வரமளித்து அன்னையில் உவந்த அருட்பெருஞ் ஜோதி               126
64           ஓதி ஓதாமல் உறவெனக் களித்த ஆதி ஈறில்லா அருட்பெருஞ் ஜோதி 128
65           படிஅடி வான்முடி பற்றினும் தோற்றா அடிமுடி எனும்ஓர் அருட்பெருஞ் ஜோதி           130
66           பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கெங்கும் அவனுக் கவனாம் அருட்பெருஞ் ஜோதி                132
67           திவள்உற்ற அண்டத் திரளின் எங்கெங்கும் அவளுக் கவளாம் அருட்பெருஞ் ஜோதி                 134
68           மதன்உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும் அதனுக் கதுவாம் அருட்பெருஞ் ஜோதி                 136
69           எப்பாலு மாய்வெளி எல்லாம் கடந்துமேல் அப்பாலும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி 138
70           வல்லதாய் எல்லாம் ஆகிஎல் லாமும் அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ் ஜோதி     140
71           எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர் அப்பொருள் ஆகிய அருட்பெருஞ் ஜோதி               142
72           தாங்ககி லாண்ட சராசர நிலைநின்று ஆங்குற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி       144
73           சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம்புறத்து அத்திசை விளங்கும் அருட்பெருஞ் ஜோதி                 146
74           சத்திகள் எல்லாம் தழைக்கஎங் கெங்கும் அத்தகை விளங்கும் அருட்பெருஞ் ஜோதி                 148
75           முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி               150
76           பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் அரிதினும் அரிதாம் அருட்பெருஞ் ஜோதி                 152
77           காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும் ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி     154
78           இன்புறு சித்திகள் எல்லாம் புரிகஎன்று அன்புடன் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                 156
79           இறவா வரமளித் தென்னைமேல் ஏற்றிய அறவாழி யாம்தனி அருட்பெருஞ் ஜோதி                 158
80           நான்அந்தம் இல்லா நலம்பெற எனக்கே ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ் ஜோதி     160
81           எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்றெனை அண்ணிஉள் ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி               162
82           மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீ அது வாயினை என்று அருள் அருட்பெருஞ் ஜோதி               164
83           எண்ணிற் செழுந்தேன் இனியதெள் அமுதென அண்ணித்து இனிக்கும் அருட்பெருஞ் ஜோதி               166
84           சிந்தையில் துன்பொழி  சிவம் பெறுக எனத் தொழில் ஐந்தையும் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி            168
85           எங்கெங்கு இருந்துயிர் ஏதெது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ் ஜோதி               170
86           சகமுதல் புறப்புறம் தங்கிய அகப்புறம் அகம்புறம் முற்றுமாய் அருட்பெருஞ் ஜோதி                172
87           சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும் அகரமும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி               174
88           உபரச வேதியின் உபயமும் பரமும் அபரமும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி     176
89           மந்தணம் இதுஎன மறுவிலா மதியால் அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ் ஜோதி    178
90           எம்புயக் கனிஎன எண்ணுவார் இதய அம்புயத் தமர்ந்த அருட்பெருஞ் ஜோதி              180
91           செடி அறுத்தே திட தேகமும் போகமும் அடியருக்கே தரும் அருட்பெருஞ் ஜோதி      182
92           துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை அன்பருக்கே தரும் அருட்பெருஞ் ஜோதி     184
93           பொதுஅது சிறப்பது புதியது பழயதென்று அதுஅது வாய்த்திகழ் அருட்பெருஞ் ஜோதி                 186
94           சேதனப் பெருநிலை திகழ்தரும் ஒருபரை ஆதனத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி                 188
95           ஓமயத் திருவுரு உவப்புடன் அளித்தெனக்கு ஆமயத் தடைதவிர் அருட்பெருஞ் ஜோதி                 190
96           எப்படி எண்ணியது என்கருத்து இங்கெனக்கு அப்படி அருளிய அருட்பெருஞ் ஜோதி                 192
97           எத்தகை விழைந்தன என்மனம் இங்கெனக்கு அத்தகை அருளிய அருட்பெருஞ் ஜோதி                 194
98           இங்குறத் திரிந்துளம் இளையா வகைஎனக்கு அங்கையில் கனியாம் அருட்பெருஞ் ஜோதி               196
99           பார் உயப் புரிகெனப் பணித்து எனக்கு அருளி என் ஆருயிர்க்கு உள்ஒளிர் அருட்பெருஞ் ஜோதி            198
100         தேவியுற்று ஒளிர்தரு திரு உருவுடன் எனது ஆவியில் கலந்தொளிர் அருட்பெருஞ் ஜோதி               200
101         எவ்வழி மெய்வழி என்பவே தாகமம் அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி           202
102         வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள் ஐயறி வளித்த அருட்பெருஞ் ஜோதி      204
103         சாமாறு அனைத்தும் தவிர்த்திங்கு எனக்கே ஆமாறு அருளிய அருட்பெருஞ் ஜோதி                 206
104         சத்திய மாம்சிவ சத்தியை ஈந்தெனக்கு அத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ் ஜோதி                 208
105         சாவா நிலைஇது தந்தனம் உனக்கே ஆவா எனஅருள் அருட்பெருஞ் ஜோதி    210
106         சாதியும் மதமும் சமயமும் பொய்என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி 212
107         மயர்ந்திடேல் சிறிதும் மனந்தளர்ந் தஞ்சேல் அயர்ந்திடேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி               214
108         தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல் ஆசறத் தெரித்த அருட்பெருஞ் ஜோதி 216
109         காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின் ஆட்டியல் புரியும் அருட்பெருஞ் ஜோதி                 218
110         எங்குலம் எம்மினம் என்பதொண் ணூற்றாறு அங்குலம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி                 220
111         எம்மதம் எம்இறை என்ப உயிர்த்திரள் அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி      222
112         கூறிய கருநிலை குலவிய கீழ்மேல் ஆறியல் எனஉரை அருட்பெருஞ் ஜோதி 224
113         எண்தர முடியா திலங்கிய பற்பல அண்டமும் நிறைந்தொளிர் அருட்பெருஞ் ஜோதி                 226
114         சாருயிர்க் கெல்லாம் தாரக மாம்பரை ஆருயிர்க் குயிராம் அருட்பெருஞ் ஜோதி       228
115         வாழி நீடூழி வாழி என்றோங்கு பேர் ஆழியை அளித்த அருட்பெருஞ் ஜோதி   230
116         மாய்ந்தவர் மீட்டும் வருவெறி தந்திதை ஆய்ந்திடென்று உரைத்த அருட்பெருஞ் ஜோதி                 232
117         எச்சம் நினக்கிலை எல்லாம் பெறுகஎன்று அச்சம் தவிர்த்தஎன் அருட்பெருஞ் ஜோதி                 234
118         நீடுக நீயே நீள்உல கனைத்தும்நின்று ஆடுக என்றஎன் அருட்பெருஞ் ஜோதி                236
119         முத்திறல் வடிவமும் முன்னியாங் கெய்துறும் அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி               238
120         மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும் ஆவகை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                 240
121         கருமசித் திகளின் கலைபல கோடியும் அரசுற எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி       242
122         யோக சித்திகள் வகை உறுபல கோடியும் ஆகஎன் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                 244
123         ஞான சித்தியின் வகை நல்விரிவு அனைத்தும் ஆனியின்று எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி               246
124         புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை அடைவதென் றருளிய அருட்பெருஞ் ஜோதி               248
125         முத்திஎன் பதுநிலை முன்னுறு சாதனம் அத்தக வென்றஎன் அருட்பெருஞ் ஜோதி   250
126         சித்திஎன் பதுநிலை சேர்ந்த அனுபவம் அத்திறல் என்றஎன் அருட்பெருஞ் ஜோதி    252
127         ஏகசிற் சித்தியே இயல்உற அனேகம் ஆகிய தென்றஎன் அருட்பெருஞ் ஜோதி             254
128         இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம் அன்பருக் கென்ற என் அருட்பெருஞ் ஜோதி                 256
129         எட்டிரண் டென்பன இயலும் முற்படி என அட்ட நின் றருளிய அருட்பெருஞ் ஜோதி 258
130         இப்படி கண்டனை இனிஉறு படிஎலாம் அப்படி யேஎனும் அருட்பெருஞ் ஜோதி          260
131         படிமுடி கடந்தனை பார்இது பார்என அடிமுடி காட்டிய அருட்பெருஞ் ஜோதி                262
132         ஜோதியுட் ஜோதியின் சொரூபமே அந்தம் ஆதிஎன் றருளிய அருட்பெருஞ் ஜோதி   264
133         இந்தசிற் ஜோதியின் இயல்உரு ஆதி அந்தம்என் றருளிய அருட்பெருஞ் ஜோதி          266
134         ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே ஆதிஎன் றருளிய அருட்பெருஞ் ஜோதி                268
135         நல்அமு தென்ஒரு நாஉளம் காட்டிஎன் அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி          270
136         கற்பகம் என்உளங் கைதனில் கொடுத்தே அற்புதம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி               272
137         கதிர்நலம் என்இரு கண்களிற் கொடுத்தே அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி               274
138         அருள்ஒளி என்தனி அறிவினில் விரித்தே அருள்நெறி விளக்கெனும் அருட்பெருஞ் ஜோதி               276
139         பரைஒளி என்மனப் பதியினில் விரித்தே அரசது இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி                 278
140         வல்லப சத்திகள் வகைஎலாம் அளித்தெனது அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி                 280
141         ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம் ஆரமு தெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                 282
142         சூரிய சந்திர ஜோதியுட் ஜோதிஎன்று ஆரியர் புகழ்தரும் அருட்பெருஞ் ஜோதி            284
143         பிறிவேது இனி உனைப் பிடித்தனம் உனக்கு நம் அறிவே வடிவெனும் அருட்பெருஞ் ஜோதி               286
144         எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி                 288
145         மாண்டுழ லாவகை வந்திளங் காலையே ஆண்டுகொண் டருளிய அருட்பெருஞ் ஜோதி               290
146         பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்தெனது அற்றமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி               292
147         சமயம் குலமுதல் சார்பெலாம் விடுத்த அமயந் தோன்றிய அருட்பெருஞ் ஜோதி      294
148         வாய்தற் குரித்தெனும் மறைஆ கமங்களால் ஆய்தற் கரிய அருட்பெருஞ் ஜோதி     296
149         எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை அல்லா திலைஎனும் அருட்பெருஞ் ஜோதி               298
150         நவைஇலா உளத்தில் நாடிய நாடிய அவைஎலாம் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி 300
151         கூற்றுதைத் தென்பால் குற்றமும் குணங்கொண்டு ஆற்றல்மிக் களித்த அருட்பெருஞ் ஜோதி               302
152         நன்றறி வறியா நாயினேன் தனையும் அன்றுவந் தாண்ட அருட்பெருஞ் ஜோதி         304
153         நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ் ஜோதி                 306
154         தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன் ஆத்திரம் அளித்த அருட்பெருஞ் ஜோதி 308
155         எச்சோ தனைகளும் இயற்றா தெனக்கே அச்சோ என்றருள் அருட்பெருஞ் ஜோதி    310
156         ஏறா நிலைநடு ஏற்றிஎன் றனைஈண்டு ஆறாறு கடத்திய அருட்பெருஞ் ஜோதி           312
157         தாபத் துயரம் தவிர்த்துல குறும்எலா ஆபத்தும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி               314
158         மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே அருட்குரு வாகிய அருட்பெருஞ் ஜோதி                 316
159         உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ் ஜோதி                 318
160         இருள் அறுத்து என்உளத் தெண்ணியாங் கருளி அருளமு தளித்த அருட்பெருஞ் ஜோதி                 320
161         தெருள்நிலை இதுவெனத் தெருட்டிஎன் உளத்திருந்து அருள்நிலை காட்டிய அருட்பெருஞ் ஜோதி            322
162         பொருட்பதம் எல்லாம் புரிந்துமேல் ஓங்கிய அருட்பதம் அளித்த அருட்பெருஞ் ஜோதி                 324
163         உருள்சக டாகிய உளஞ்சலி யாவகை அருள்வழி நிறுத்திய அருட்பெருஞ் ஜோதி      326
164         வெருள்மன மாயை வினைஇருள் நீக்கிஉள் அருள்விளக் கேற்றிய அருட்பெருஞ் ஜோதி                 328
165         சுருள்விரி வுடைமனச் சுழல்எலாம் அறுத்தே அருள்ஒளி நிரப்பிய அருட்பெருஞ் ஜோதி                 330
166         விருப்போ டிகல்உறு வெறுப்பும் தவிர்த்தே அருட்பே றளித்த அருட்பெருஞ் ஜோதி 332
167         அருட்பேர் தரித்து உலகனைத்தும் மலர்ந்திட அருட்சீர் அளித்த அருட்பெருஞ் ஜோதி                 334
168         உலகெலாம் பரவஎன் னுள்ளத் திருந்தே அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ் ஜோதி   336
169         விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய் அண்ணி நிறைந்த அருட்பெருஞ் ஜோதி               338
170         விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய் அண்ணி வயங்கும் அருட்பெருஞ் ஜோதி               340
171         காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய் ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி                 342
172         காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய் ஆற்ற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி                 344
173         அனலினுள் அனலாய் அனல்நடு அனலாய் அனலுற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி                 346
174         அனலுறும் அனலாய் அனல்நிலை அனலாய் அனலுற வயங்கும் அருட்பெருஞ் ஜோதி                 348
175         புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய் அனைஎன வயங்கும் அருட்பெருஞ் ஜோதி                 350
176         புனலுறு புனலாய்ப் புனல்நிலைப் புனலாய் அனைஎனப் பெருகும் அருட்பெருஞ் ஜோதி               352
177         புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய் அவைதர வயங்கும் அருட்பெருஞ் ஜோதி                 354
178         புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய் அவைகொள விரிந்த அருட்பெருஞ் ஜோதி                 356
179         விண்ணிலை சிவத்தின் வியனிலை அளவி அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 358
180         வளிநிலைச் சத்தியின் வளர்நிலை அளவி அளிஉற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 360
181         நெருப்பது நிலைநடு நிலைஎலாம் அளவி அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஜோதி    362
182         நீர்நிலை திரைவளர் நிலைதனை அளவி ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி          364
183         புவிநிலைச் சுத்தமாம் பொற்பதி அளவி அவையுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி      366
184         மண்ணினில் திண்மையை வகுத்து அதில் கிடக்கை அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி            368
185         மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி               370
186         மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திறம் அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 372
187         மண்ணினில் நாற்றம் வகுத்தது பல்வகை அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி                 374
188         மண்ணினில் பற்பல வகை கரு நிலஇயல் அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி                 376
189         மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல்பயன் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 378
190         மண்ணிடை அடிநிலை வகுத்ததில் பல்நிலை அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி               380
191         மண்ணில் ஐந்து ஐந்து வகையும் கலந்துகொண்டு அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி               382
192         மண்ணியல் சத்திகள் மண்செயல் சத்திகள் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 384
193         மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 386
194         மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 388
195         மண்கணச் சத்திகள் வகைபல பலவும் அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 390
196         மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும் அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 392
197         மண்கரு உயிர்த்தொகை வகைவிரி பலவா அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஜோதி               394
198         மண்ணினில் பொருள்பல வகைவிரி வெவ்வேறு அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி               396
199         மண்ணுறு நிலைபல வகுத்ததில் செயல்பல அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 398
200         மண்ணிடைப் பக்குவம் வகுத்ததில் பயன்பல அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி               400
201         மண்ணியல் பலபல வகுத்ததில் பிறவும் அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 402
202         நீரினில் தண்மையும் நிகழ்ஊ றொழுக்கமும் ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி 404
203         நீரினில் பசுமையை நிறுத்தி அதில் பல ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி 406
204         நீரிடைப் பூவியல் நிகழ்உறு திறஇயல் ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி   408
205         நீரினில் சுவைநிலை நிறைத்து அதில் பல்வகை ஆருறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி                 410
206         நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி      412
207         நீரிடை நான்கியல் நிலவுவித்து அதிற்பல ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி          414
208         நீரிடை அடிநடு நிலைஉற வகுத்த னல் ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி               416
209         நீரிடை ஒளிஇயல் நிகழ்பல குணஇயல் ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி                418
210         நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி   420
211         நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி 422
212         நீரிடை உயிர்பல நிகழ்உறு பொருள்பல ஆருற அமைத்த அருட்பெருஞ் ஜோதி         424
213         நீரிடை நிலைபல நிலைஉறு செயல்பல ஆர்கொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி     426
214         நீர்உறு பக்குவ நிறைவுறு பயன்பல ஆருற அமைத்த அருட்பெருஞ் ஜோதி    428
215         நீர்இயல் பலபல நிறைத்து  அதில் பிறவும் ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி       430
216         தீயினில் சூட்டியல் சேர்தரச் செலவியல் ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                432
217         தீயினில் வெண்மைத் திகழ்இயல் பலவாய் ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி        434
218         தீயிடைப் பூஎலாம் திகழுறு திறம்எலாம் ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி               436
219         தீயிடை ஒளியே திகழுற அமைத்ததில் ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி               438
220         தீயிடை அருநிலை திருநிலை கருநிலை ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி         440
221         தீயிடை மூவியல் செறிவித்து அதிற்பல ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி 442
222         தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி             444
223         தீயிடைப் பெருந்திறல் சித்திகள் பலபல ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி         446
224         தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும் ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி 448
225         தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள் ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி              450
226         தீயிடை உயிர்பல திகழுறு பொருள்பல ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி 452
227         தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன் ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி       454
228         தீயினில் பக்குவம் சேர்குணம் இயற்குணம் ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி 456
229         தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுவியல் ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி 458
230         தீஇயல் பலபல செறித்ததில் பலவும் ஆயுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி       460
231         காற்றிடை அசைஇயல் கலைஇயல் உயிரியல் ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி               462
232         காற்றிடைப் பூவியல் கருதுறு திறஇயல் ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி     464
233         காற்றினில் ஊறியல் காட்டுறு பலபல ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி    466
234         காற்றினில் பெருநிலை கருநிலை அளவில ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 468
235         காற்றிடை ஈரியல் காட்டி அதிற்பல ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி 470
236         காற்றினில் இடைநடு கடைநடு அகம்புறம் ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 472
237         காற்றினில் குணம்பல கணம்பல வணம்பல ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி               474
238         காற்றிடைச் சத்திகள் கணக்கில உலப்பில ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 476
239         காற்றிடைச் சத்தர்கள் கணிதம் கடந்தன ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி   478
240         காற்றிடை உயிர்பல கதிபல கலைபல ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி 480
241         காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும் ஆற்றுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி               482
242         காற்றிடை உணரியல் கருதியல் ஆகிய ஆற்றுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி            484
243         காற்றிடைச் செயல்எலாம் கருதிய பயன்எலாம் ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி               486
244         காற்றினில் பக்குவம் கதிஎலாம் விளைவித்து ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 488
245         காற்றினில் காலம் கருதுறு வகைஎலாம் ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி      490
246         காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும் ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி        492
247         வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல் அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி               494
248         வெளியிடைப் பூஎலாம் வியப்புறு திறன்எலாம் அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி               496
249         வெளியினில் ஒலிநிறை வியநிலை அனைத்தும் அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி               498
250         வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை அளிகொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி               500
251         வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே அளிபெற விளக்கும் அருட்பெருஞ் ஜோதி                 502
252         வெளியினில் சத்திகள் வியப்புற சத்தர்கள் அளியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி 504
253         வெளியிடை ஒன்றே விரித்ததில் பற்பல அளிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி            506
254         வெளியிடைப் பலவே விரித்ததில் பற்பல அளிதர அமைத்த அருட்பெருஞ் ஜோதி   508
255         வெளியிடை உயிரியல் வித்தியல் சித்தியல் அளிபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 510
256         வெளியின் அனைத்தையும் விரித்ததில் பிறவும் அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி               512
257         புறநடு வொடுகடை புணர்ப்பித்து  ஒருமுதல் அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 514
258         புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை அறம்பெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி               516
259         அகப்புற நடுக்கடை அணைவால் புறமுதல் அகப்பட வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 518
260         அகப்புற நடுமுதல் அணைவால் புறக்கடை அகப்பட அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 520
261         கருதக நடுவொடு கடைஅணைந்து அகமுதல் அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 522
262         தணிஅக நடுவொடு தலைஅணைந்து அகக்கடை அணியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி               524
263         அகநடு புறக்கடை அணைந்து அகப் புறமுதல் அகமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 526
264         அகநடு புறத்தலை அணைந்து அகப் புறக்கடை அகலிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி               528
265         அகநடு அதனால் அகப்புற நடுவை அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி        530
266         அகப்புற நடுவால் அணிபுற நடுவை அகப்பட அமைத்த அருட்பெருஞ் ஜோதி            532
267         புறநடு அதனால் புறப்புற நடுவை அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி          534
268         புகலரும் அகண்ட பூரண நடுவால் அகநடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி           536
269         புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புறம் அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி               538
270         புறத்தியல் கடைமுதல் புணர்ப்பால் புறத்துறும் அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி               540
271         அகப்புறக் கடைமுதல் அணைவால் அகக்கணம் அகத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி               542
272         அகக்கடை முதல் புணர்ப் பதனால் அகக்கணம் அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி               544
273         வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும் ஆனற வகுத்த அருட்பெருஞ் ஜோதி       546
274         நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும் அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஜோதி                548
275         நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மேல் உயிர்ப்பும் ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                550
276         புனல்மேல் புவியும் புவிமேல் புடைப்பும் அனல்மேல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி 552
277         பகுதிவான் வெளியில் படர்ந்தமா பூத அகல்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி      554
278         உயிர்வெளி இடையே உரைக்கரும் பகுதி அயவெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி 556
279         உயிர்வெளி அதனை உணர்கலை வெளியில் அயலற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 558
280         கலைவெளி அதனைக் கலப்பறு சுத்த அலர்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி       560
281         சுத்த நல் வெளியைத் துரிசறு பரவெளி அத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி        562
282         பரவெளி அதனைப் பரம்பர வெளியில் அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                564
283         பரம்பர வெளியைப் பராபர வெளியில் அரந்தெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி        566
284         பராபர வெளியைப் பகர்பெரு வெளியில் அராவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி      568
285         பெருவெளி அதனைப் பெருஞ்சுக வெளியில் அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 570
286         குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில் அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி      572
287         மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை அனமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 574
288         காலமே முதலிய கருவிகள் கலைவெளி ஆலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி               576
289         துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி              578
290         இவ்வெளி எல்லாம் இலங்கஅண் டங்கள் அவ்வயின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 580
291         ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர் ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி              582
292         சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண்டங்களை அருட் திறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி               584
293         காவல் செய் தலைவரைக் காவல் அண்டங்களை ஆவகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி               586
294         அழித்தல்செய் தலைவரை அவரண் டங்களை அழுக்கற அமைத்த அருட்பெருஞ் ஜோதி               588
295         மறைத்திடு தலைவரை மற்றும்அண் டங்களை அறத்தொடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி               590
296         தெளிவுசெய் தலைவரைத் திகழும்அண் டங்களை அளிபெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி               592
297         விந்துவாம் சத்தியை விந்தின்அண் டங்களை அந்திறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 594
298         ஓங்கார சத்திகள் உற்றஅண் டங்களை ஆங்காக அமைத்த அருட்பெருஞ் ஜோதி    596
299         சத்தத் தலைவரைச் சாற்றும்அண் டங்களை அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 598
300         நாதமாம் பிரமமும் நாதஅண் டங்களும் ஆதரம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி             600
301         பகர்பரா சத்தியைப் பதியும்அண் டங்களை அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி 602
302         பரசிவ பதியைப் பரசிவா அண் டங்களை அரசுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி   604
303         எண்ணில்பல் சத்தியை எண்ணில்அண் டங்களை அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி               606
304         அளவில்பல் சத்தரை அளவில்அண் டங்களை அளவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 608
305         உயிர்வகை அண்டம் உலப்பில எண்ணில அயர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி    610
306         களவில கடல்வகை கங்கில கரைஇல அளவில வகுத்த அருட்பெருஞ் ஜோதி                612
307         கடலவை அனைத்துங் கரைஇன்றி நிலையுற அடல்அனல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி               614
308         கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும் அடலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 616
309         கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்உயிர் அடலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி 618
310         மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்உயிர் அலைவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 620
311         ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம் அன்றற வகுத்த அருட்பெருஞ் ஜோதி 622
312         பத்திடை ஆயிரம் பகல் அதில் கோடி அத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி    624
313         நூற்றிடை இலக்கம் நுவலதில் அனந்தம் ஆற்றிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி    626
314         கோடியில் அனந்த கோடிபல் கோடி ஆடுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி          628
315         வித்தியல் ஒன்றா விளைவியல் பலவா அத்தகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி     630
316         விளைவியல் அனைத்தும் வித்திடை அடங்க அளவுசெய் தமைத்த அருட்பெருஞ் ஜோதி               632
317         வித்தும் பதமும் விளைஉப கரிப்பும் அத்திறல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி           634
318         வித்திடை முளையும் முளையிடை விளைவும் அத்தக அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 636
319         வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும் அத்திறம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி             638
320         விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும் அளையுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி               640
321         முளையதின் முளையும் முளையினுள் முளையும் அளைதர அமைத்த அருட்பெருஞ் ஜோதி               642
322         வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும் அத்துற அமைத்த அருட்பெருஞ் ஜோதி       644
323         பதமதிற் பதமும் பதத்தினுள் பதமும் அதிர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                646
324         ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும் அற்றென வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 648
325         பொருள்நிலை உறுப்பியல் பொதுவகை முதலிய அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி               650
326         உறவினில் உறவும் உறவினில் பகையும் அறன் உற வகுத்த அருட்பெருஞ் ஜோதி   652
327         பகையினில் பகையும் பகையினில் உறவும் அகைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 654
328         பாதியும் முழுதும் பதிசெயும் அந்தமும் ஆதியும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி            656
329         துணையும் நிமித்தமும் துலங்கதின் அதுவும் அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 658
330         உருவதின் உருவும் உருவினுள் உருவும் அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி      660
331         அருவினுள் அருவும் அருவதில் அருவும் அருளியல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி 662
332         கரணமும் இடமும் கலைமுதல் அணையுமோர் அரணிலை வகுத்த அருட்பெருஞ் ஜோதி               664
333         உருவதில் அருவும் அருவதில் உருவும் அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி          666
334         வண்ணமும் வடிவும் மயங்கிய வகைபல அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி   668
335         சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும் அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி               670
336         பெருமையின் பெருமையும் பெருமையில் சிறுமையும் அருள்நிலை வகுத்த அருட்பெருஞ் ஜோதி            672
337         திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும் அண்மையின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி            674
338         மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும் அன்மைஅற் றமைத்த அருட்பெருஞ் ஜோதி            676
339         அடியினுள் அடியும் அடியிடை அடியும் அடியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி          678
340         நடுவினுள் நடுவும் நடுவதில் நடுவும் அடர்வுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி            680
341         முடியினுள் முடியும் முடியினில் முடியும் அடர்தர அமைத்த அருட்பெருஞ் ஜோதி     682
342         அகப்பூ அகவுறுப் பாக்க அதற்கவை அகத்தே வகுத்த அருட்பெருஞ் ஜோதி   684
343         புறப்பூ புறத்தில் புனையிரு வாக்கிட அறத்துடன் வகுத்த அருட்பெருஞ் ஜோதி          686
344         அகப் புறப்பூ அகப்புற உறுப்பு இயற்றிட அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி 688
345         புறப்புறப் பூவதில் புறப்புற உறுப்புற அறத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி          690
346         பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில் ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ் ஜோதி               692
347         ஊர்வன பறப்பன உறுவன நடப்பன ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி      694
348         அசைவில அசைவுள ஆருயிர்த் திரள்பல அசலற வகுத்த அருட்பெருஞ் ஜோதி           696
349         அறிவொரு வகைமுதல் ஐவகை அறுவகை அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி     698
350         வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன்உற அவ்வா றமைத்த அருட்பெருஞ் ஜோதி                 700
351         சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி 702
352         பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 704
353         பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 706
354         பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும் அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 708
355         பெண்ணியல் ஆணும் ஆணியல் பெண்ணும் அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி               710
356         பெண்திறல் புறத்தும் ஆண்திறல் அகத்தும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 712
357         பெண்ணியல் மனமும் ஆணியல் அறிவும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 714
358         தனித்தனி வடிவினும் தக்கஆண் பெண்இயல் அனைத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி               716
359         உனற்கரும் உயிருள உடலுள உலகுள அனைத்தையும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                 718
360         ஓவுறா எழுவகை உயிர்முதல் அனைத்தும் ஆவகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி    720
361         பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில் ஐபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                 722
362         தாய்கருப் பையினுள் தங்கிய உயிர்களை ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                 724
363         முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை அட்டமே காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               726
364         நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும் அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               728
365         வேர்வுற உதித்த மிகும்உயிர்த் திரள்களை ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                 730
366         உடலுறு பிணியால் உயிர்உடல் கெடாவகை அடலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                 732
367         சிசுமுதல் பருவச் செயல்களின் உயிர்களை அசைவறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               734
368         உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும் அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               736
369         பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை ஆடுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                 738
370         முச்சுட ராதியால் எச்சக உயிரையும் அச்சறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி          740
371         வான்முகில் சத்தியால் மழைபொழி வித்துயிர் ஆனறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               742
372         இன்புறு சத்தியால் எழில்மழை பொழிவித்து அன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               744
373         எண்இயல் சத்தியால் எல்லா உலகினும் அண்உயிர் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                 746
374         அண்டப் புறப்புற அமுதம் பொழிந்துயிர் அண்டுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                 748
375         தேவரை எல்லாம் திகழ்புற அமுதளித்து ஆவகை காத்தருள் அருட்பெருஞ் ஜோதி 750
376         அகப்புற அமுதளித்து ஐவரா திகளை அகப்படக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி    752
377         தரும்அக அமுதால் சத்தி சத் தர்களை அருளினில் காக்கும் அருட்பெருஞ் ஜோதி    754
378         காலமும் நியதியும் காட்டிஎவ் வுயிரையும் ஆலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                 756
379         விச்சையை இச்சையை விளைவித் துயிர்களை அச்சறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               758
380         போகமும் களிப்பும் பொருந்துவித் துயிர்களை ஆகமுட் காக்கும் அருட்பெருஞ் ஜோதி                 760
381         கலைஅறிவு அளித்துக் களிப்பினில் உயிரெலாம் அலைவறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               762
382         விடய நிகழ்ச்சியால் மிகும்உயிர் அனைத்தையும் அடைவுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               764
383         துன்பளித்து ஆங்கே சுகமளித்து உயிர்களை அன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               766
384         கரணேந் தியத்தால் களிப்புற உயிர்களை அரணேர்ந் தளித்தருள் அருட்பெருஞ் ஜோதி               768
385         எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்கு அத்தகை அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி               770
386         எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்கு அப்படி அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி                 772
387         ஏங்காது உயிர்த்திரள் எங்கெங்கு இருந்தன ஆங்காங்கு அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி               774
388         சொல்லுறும் அசுத்தத் தொல்லுயிர்க்கு அவ்வகை அல்லலில் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               776
389         சுத்தமும் அசுத்தமும் தோய்உயிர்க் கிருமையின் அத்தகை காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               778
390         வாய்ந்திடும் சுத்த வகைஉயிர்க்கு ஒருமையின் ஆய்ந்துறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               780
391         எவைஎலாம் எவைஎலாம் ஈண்டின ஈண்டின அவைஎலாம் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி               782
392         அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும் அண்டற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி 784
393         பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும் அண்டற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                 786
394         உயிர்உறு மாயையின் உறுவிரி வனைத்தும் அயிர்அற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                 788
395         உயிர்உறும் இருவினை உறுவிரி வனைத்தும் அயர்வற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                 790
396         காமப் புடைப்பு உயிர்கண் தொடராவகை ஆமற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி     792
397         பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம் அங்கற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                 794
398         மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு அதம்பெற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                 796
399         வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும் அடர்பற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                 798
400         சுத்தமும் அசுத்தமும் தோய்ந்தவா தனைகளை அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி               800
401         நால்வயிற் துரிசும் நண்ணுயிர் ஆதியில் ஆலற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி          802
402         நால்வயிற் படைப்பும் நால்வயிற் காப்பும் ஆலற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி      804
403         மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில் ஆவிடத் தடக்கும் அருட்பெருஞ் ஜோதி                 806
404         மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில் ஆவிடம் அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                 808
405         தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும் அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி    810
406         சுத்தமா நிலையில் சூழுறு விரிவை அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி             812
407         கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால் அரைசது மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி               814
408         பேருறு நீலப் பெருந்திரை அதனால் ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி           816
409         பச்சைத் திரையால் பரவெளி அதனை அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி      818
410         செம்மைத் திரையால் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி               820
411         பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி            822
412         வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி            824
413         கலப்புத் திரையால் கருதனு பவங்களை அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி                 826
414         விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால் அடர்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி                 828
415         தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால் அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி               830
416         திரைமறைப்பு எல்லாம் தீர்த்து ஆங்காங்கே அரைசுறக் காட்டும் அருட்பெருஞ் ஜோதி                 832
417         தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளின் ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ் ஜோதி                 834
418         சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை அத்தகை காட்டும் அருட்பெருஞ் ஜோதி    836
419         எனைத்து ஆணவமுதல் எல்லாந் தவிர்த்தே அனுக்கிரகம் புரி அருட்பெருஞ் ஜோதி                 838
420         விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை அடைவுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி               840
421         சொருப மறைப்பெலாம் தொலைப்பித் துயிர்களை அருளினில் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி            842
422         மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி                 844
423         எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே அவ்வகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி 846
424         கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம் அடையுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி               848
425         சத்திகள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம் அத்துறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி               850
426         சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம் அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி               852
427         படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி               854
428         காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ் ஜோதி               856
429         அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும் அடர்ப்பற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                 858
430         மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி               860
431         தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை அருட் திறம் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி               862
432         ஐந்தொழில் ஆதிசெய் ஐவர் ஆதிகளை ஐந்தொழி லாதிசெய் அருட்பெருஞ் ஜோதி                 864
433         இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில் அறந்தலை அளித்த அருட்பெருஞ் ஜோதி       866
434         செத்தவர் எல்லாம் சிரித்தாங்கு எழுதிறல் அத்தகை காட்டிய அருட்பெருஞ் ஜோதி                 868
435         இறந்தவர் எழுகஎன்று எண்ணியாங் கெழுப்பிட அறந்துணை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி            870
436         செத்தவர் எழுகெனச் செப்பியாங் கெழுப்பிட அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி               872
437         சித்தெலாம் வல்ல திறல்அளித் தெனக்கே அத்தன்என் றோங்கும் அருட்பெருஞ் ஜோதி                 874
438         ஒன்றது இரண்டது ஒன்றின் இரண்டது ஒன்றினுள் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே        876
439         ஒன்றல இரண்டல ஒன்றின்இ ரண்டல ஒன்றினுள் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே          878
440         ஒன்றினில் ஒன்றுள ஒன்றினில் ஒன்றில ஒன்றற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே           880
441         களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி விளங்கஎன் உள்ளே விளங்குமெய்ப் பொருளே      882
442         மூவிரு நிலையின் முடி நடு முடிமேல் ஓவற விளங்கும் ஒருமைமெய்ப் பொருளே    884
443         எழுநிலை மிசையே இன்புரு வாகி வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே          886
444         நவநிலை மிசையே நடுவுறு நடுவே சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே         888
445         ஏகா தசநிலை யாதுஅதின் நடுவே ஏகா தனமிசை இருந்த மெய்ப் பொருளே               890
446         திரையோ தசநிலை சிவவெளி நடுவே வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே                 892
447         ஈரெண் நிலைஎன இயம்புமேல் நிலையில் பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே      894
448         எல்லா நிலைகளும் இசைந்தாங் காங்கே எல்லா மாகி இலங்குமெய்ப் பொருளே   896
449         மனாதிகள் பொருந்தா வானடு வானாய் அனாதி உண்மை அதாய் அமர்ந்தமெய்ப் பொருளே      898
450         தானொரு தானாய்த் தானே தானாய் ஊன் உயிர் விளக்கும் ஒருதனிப் பொருளே 900
451         அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப் பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே                 902
452         இயல்பினுள் இயல்பா இயல்பே இயல்பா உயலுற விளங்கும் ஒருதனிப் பொருளே 904
453         அருவினுள் அருவாய் அருஉரு அருவாய் உருவினுள் விளங்கும் ஒருபரம் பொருளே                 906
454         அலகிலாச் சித்தாய் அதுநிலை அதுவாய் உலகெலாம் விளங்கும் ஒருதனிப் பொருளே                 908
455         பொருளினுள் பொருளாய்ப் பொருளது பொருளாய் ஒருமையின் விளங்கும் ஒருதனிப் பொருளே      910
456         ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே                 912
457         கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும் ஆட்டுற விளங்கும் அருட்பெரும் பொருளே                 914
458         அறிவுறு சித்திகள் அனந்தகோ டிகளும் பிறிவற விளங்கும் பெருந்தனிப் பொருளே                 916
459         வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க ஆடல்செய் தருளும் அரும்பெரும் பொருளே   918
460         பற்றுகள் எல்லாம் பதிநெறி விளங்க உற்றருள் ஆடல்செய் ஒருதனிப் பொருளே     920
461         பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே    922
462         பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே பரம்பதம் பரமே பரஞ்சிதம் பரமே           924
463         பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே         926
464         பரங்கொள் சிற்பரமே பரஞ்செய் தற்பரமே தரங்கொள் பொற்பரமே தனிப்பெரும் பரமே                928
465         வரம்பரா பரமே வணம்பரா பரமே பரம்பரா பரமே பதம்பரா பரமே   930
466         சத்திய பதமே சத்துவ பதமே நித்திய பதமே நிற்குண பதமே      932
467         தத்துவ பதமே தற்பத பதமே சித்துறு பதமே சிற்சுக பதமே           934
468         தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே அம்பரம் பதமே அருட்பரம் பதமே 936
469         தந்திர பதமே சந்திர பதமே மந்திர பதமே மந்தண பதமே             938
470         நவந்தரு பதமே நடந்தரு பதமே சிவந்தரு பதமே சிவசிவ பதமே              940
471         பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே பிரமநிற் குணமே பிரமசிற் குணமே           942
472         பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும் பரமமே பரம பதந் தரும் சிவமே      944
473         அவனோடு அவளாய் அதுவாய் அலவாய் நவமா நிலைமிசை நண்ணிய சிவமே     946
474         எம்பொருள் ஆகி எமக்கருள் புரியும் செம்பொருள் ஆகிய சிவமே சிவமே      948
475         ஒருநிலை இதுவே உயர்நிலை எனும்ஒரு திருநிலை மேவிய சிவமே சிவமே 950
476         மெய்வைத்து அழியா வெறுவெளி நடுவுறு தெய்வப் பதியாம் சிவமே சிவமே             952
477         புரை தவிர்த்து எனக்கே பொன்முடி சூட்டிச் சிரமுற நாட்டிய சிவமே சிவமே                 954
478         கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச் செல்வமும் அளித்த சிவமே சிவமே     956
479         அருளமுது எனக்கே அளித்தருள் நெறிவாய்த் தெருள் உற வளர்க்கும் சிவமே சிவமே                 958
480         சத்தெலா மாகியும் தான்ஒரு தானாம் சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே   960
481         எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே 962
482         ஆரே என்னினும் இரங்குகின் றார்க்குச் சீரே அளிக்கும் சிதம்பர சிவமே         964
483         பொய்ந்நெறி அனைத்தினும் புகுத்தாது எனைஅருள் செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே              966
484         கொல்லா நெறியே குருவருள் நெறிஎனப் பல்கால் எனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே                 968
485         உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே              970
486         பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச் சிவமே                 972
487         உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே          974
488         இயல் அருள் ஒளி ஓர் ஏகதே சத்தினாம் உயிர்ஒளி காண்க என்று உரைத்த மெய்ச் சிவமே              976
489         அருள் அள்லாது அணுவும் அசைந்திடாது அதனால் அருள்நலம் பரவுகென்று அறைந்தமெய்ச் சிவமே 978
490         அருளுறின் எல்லாம் ஆகும் ஈதுண்மை அருளுற முயல்க என்று அருளிய சிவமே     980
491         அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம் இருள்நெறி என எனக்கு இயம்பிய சிவமே              982
492         அருள்பெறில் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும் தெருள்இது எனவே செப்பிய சிவமே                 984
493         அருளறிவு ஓன்றே அறிவு மற்றெல்லாம் மருளறிவு என்றே வகுத்தமெய்ச் சிவமே    986
494         அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம் மருட்சுகம் பிறஎன வகுத்தமெய்ச் சிவமே              988
495         அருட்பேறு அதுவே அரும்பெறற் பெரும்பேறு இருட்பேறு அறுக்கும்என்று இயம்பிய சிவமே             990
496         அருட்டனி வல்லபம் அதுவே எலாம்செய் பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே              992
497         அருள் அறியார் தமை அறியார் எம்மையும் பொருள் அறியார் எனப் புகன்ற மெய்ச் சிவமே              994
498         அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை பொருள்நிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே       996
499         அருள்வடி வதுவே அழியாத் தனிவடிவு அருள்பெற முயலுகென் றருளிய சிவமே     998
500         அருளே நம்மியல் அருளே நம்உரு அருளே நம்வடி வாம்என்ற சிவமே 1000
501         அருளே நம்அடி அருளே நம்முடி அருளே நம்நடு வாம்என்ற சிவமே       1002
502         அருளே நம்அறிவு அருளே நம்மனம் அருளே நம்குண மாம்என்ற சிவமே         1004
503         அருளே நம்பதி அருளே நம்பதம் அருளே நம்இட மாம்என்ற சிவமே      1006
504         அருளே நம்துணை அருளே நம்தொழில் அருளே நம்விருப் பாம்என்ற சிவமே             1008
505         அருளே நம்பொருள் அருளே நம்ஒளி அருளே நாம்அறி வாய்என்ற சிவமே      1010
506         அருளே நம்குலம் அருளே நம்இனம் அருளே நாம்அறி வாய்என்ற சிவமே        1012
507         அருளே நம்சுகம் அருளே நம்பெயர் அருளே நாம்அறி வாய்என்ற சிவமே        1014
508         அருள்ஒளி அடைந்தனை அருள்அமு துண்டனை அருண்மதி வாழ்கஎன் றருளிய சிவமே              1016
509         அருள்நிலை பெற்றனை அருள்வடி வுற்றனை அருளர சியற்றுகென் றருளிய சிவமே                 1018
510         உள்ளகத்து அமர்ந்து எனது உயிரில் கலந்தருள் வள்ளல் சிற்றம்பலம் வளர்சிவ பதியே                 1020
511         நிகரிலா இன்ப நிலைநடு வைத்தெனைத் தகவொடு காக்கும் தனிச்சிவ பதியே    1022
512         சுத்தசன் மார்க்கச் சுகநிலை தனில்எனைச் சத்தியன் ஆக்கிய தனிச்சிவ பதியே  1024
513         ஐவருங் காண்டற்கு அரும்பெரும் பொருள் என் கை வரப் புரிந்த கதிசிவ பதியே     1026
514         துன்பம் தொலைத்து அருட்சோதியால் நிறைந்த இன்பம் எனக்கருள் எழிற்சிவ பதியே                1028
515         சித்தமும் வாக்கும் செல்லாப் பெருநிலை ஒத்துற வேற்றிய ஒருசிவ பதியே  1030
516         கையற வனைத்தும் கடிந்தெனைத் தேற்றி வையமேல் வைத்த மாசிவ பதியே         1032
517         இன்புறச் சிறியேன் எண்ணுதோறு எண்ணுதோறும் அன்பொடு என் கண்ணுறும் அருட்சிவ பதியே   1034
518         பிழைஎலாம் பொறுத்தெனுள் பிறங்கிய கருணை மழைஎலாம் பொழிந்து வளர்சிவ பதியே              1036
519         உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே 1038
520         பரமுடன் அபரம் பகர்நிலை இவையெனத் திரமுற அருளிய திருவருட் குருவே         1040
521         மதிநிலை இரவியின் வளர்நிலை அனலின் திதிநிலை அனைத்தும் தெரிந்த சற் குருவே             1042
522         கணநிலை அவற்றின் கருநிலை அனைத்தும் குணமுறத் தெரித்துட் குலவு சற் குருவே                1044
523         பதிநிலை பசுநிலை பாச நிலைஎலாம் மதியுறத் தெரித்துள் வயங்கு சற் குருவே     1046
524         பிரம ரகசியம் பேசிஎன் உளத்தே தரமுற விளங்கும் சாந்த சற் குருவே              1048
525         பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே வரமுற வளர்த்து வயங்கு சற் குருவே               1050
526         சிவ ரகசியம் எலாம் தெரிவித் தெனக்கே நவநிலை காட்டிய ஞான சற் குருவே         1052
527         சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுதும் அத்தகை தெரித்த அருட்சிவ குருவே        1054
528         அறிபவை எல்லாம் அறிவித்தென் னுள்ளே பிறிவற விளங்கும் பெரிய சற் குருவே 1056
529         கேட்பவை எல்லாம் கேட்பித் தென்உளே வேட்கையின் விளங்கும் விமல சற் குருவே                1058
530         காண்பவை எல்லாம் காட்டுவித் தெனக்கே மாண்பதம் அளித்து வயங்கு சற் குருவே                1060
531         செய்பவை எல்லாம் செய்வித் தெனக்கே உய்பவை அளித்தெனுள் ஓங்கு சற் குருவே                1062
532         உண்பவை எல்லாம் உண்ணுவித் தென்னுள் பண்பினில் விளங்கும் பரம சற் குருவே                1064
533         சாகாக் கல்வியின் தரம்எலாம் கற்பித்து ஏகாக் கரப்பொருள் ஈந்த சற் குருவே          1066
534         சத்திய மாம்சிவ சித்திகள் அனைத்தையும் மெய்த்தகை அளித்தெனுள் விளங்கு சற் குருவே             1068
535         எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்தெலாம் வல்லான் எனஎனை வைத்த சற் குருவே    1070
536         சீருற அருளாம் தேசுற அழியாப் பேருற என்னைப் பெற்ற நற் றாயே   1072
537         பொருந்திய அருட்பெரும் போகமே உறுகெனப் பெருந் தயவால் எனைப் பெற்ற நற் றாயே               1074
538         ஆன்றசன் மார்க்கம் அணிபெற எனைத்தான் ஈன்றமு தளித்த இனிய நற் றாயே   1076
539         பசித்திடு தோறும்  என்பால் அணைந்து  அருளால் வசித்தமுது அருள்புரி வாய்மை நற் றாயே               1078
540         தளர்ந்ததோறு அடியேன் சார்பணைந்து என்னை உளம் தெளிவித்த ஒருமை நற் றாயே               1080
541         அருளமு தேமுதல் ஐவகை அமுதமும் தெருளுற எனக்கருள் செல்வ நற் றாயே          1082
542         இயல் அமுதே முதல் எழுவகை அமுதமும் உயலுற எனக்கருள் உரிய நற் றாயே      1084
543         நண்புறும் எண்வகை நவவகை அமுதமும் பண்புற எனக்கருள் பண்புடைத் தாயே                1086
544         மற்றுள அமுத வகைஎலாம் எனக்கே உற்றுண வளித்தருள் ஓங்குநற் றாயே 1088
545         கலக்கமும் அச்சமும் கடிந்தென துளத்தே அலக்கணும் தவிர்த்தருள் அன்புடைத் தாயே               1090
546         துய்ப்பினில் அனைத்தும் சுகம்பெற அளித்தெனக்கு எய்ப்பெலாந் தவிர்த்த இன்புடைத் தாயே 1092
547         சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே சத்தியை அளித்த தயவுடைத் தாயே             1094
548         சத்தினி பாதம் தனைஅளித்து எனைமேல் வைத்து  அமுதளித்த மரபுடைத் தாயே                 1096
549         சத்தி சத்தர்கள் எலாஞ் சார்ந்து எனது  ஏவல்செய் சித்தியை அளித்த தெய்வ நற் றாயே               1098
550         தன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே என்னை மேல் ஏற்றிய இனிய நற் றாயே                1100
551         வெளிப்பட விரும்பிய விளைவெலாம் எனக்கே அளித்து அளித்து இன்புசெய் அன்புடைத் தாயே 1102
552         எண் அகத்தொடு புறத்து என்னை எஞ்ஞான்றும் கண்எனக் காக்கும் கருணை நற் றாயே               1104
553         இன்அருள் அமுதளித்து இறவாத் திறல்புரிந்து என்னை வளர்த்திடும் இன்புடைத் தாயே               1106
554         என் உடல் என் உயிர் என் அறிவு எல்லாம் தன்ன என் றாக்கிய தயவுடைத் தாயே    1108
555         தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத் தரியாது அணைத்த தயவுடைத் தாயே                 1110
556         சினமுதல் அனைத்தையும் தீர்த்து  எனை நனவினும் கனவினும் பிரியாக் கருணை நற் றாயே      1112
557         தூக்கமும் சோம்பும் என் துன்பமும் அச்சமும் ஏக்கமும் நீக்கிய என்தனித் தாயே    1114
558         துன்பெலாம் தவிர்த்துளே அன்பெலாம் நிரம்ப இன்பெலாம் அளித்த என்தனித் தந்தையே     1116
559         எல்லா நன்மையும் என்தனக்கு அளித்த எல்லாம் வல்லசித்து என்தனித் தந்தையே                1118
560         நாயிற் கடையேன் நலம்பெறக் காட்டிய தாயிற் பெரிதும் தயவுடைத் தந்தையே   1120
561         அறிவிலாப் பருவத்து அறிவெனக் களித்தே பிறிவிலாது அமர்ந்த பேரருள் தந்தையே                1122
562         புன்னிகர்  இல்லேன் பொருட்டு  இவண் அடைந்த தன்நிகர் இல்லாத் தனிப்பெருந் தந்தையே     1124
563         அகத்தினும் புறத்தினும் அமர்ந்தருட் ஜோதி சகத்தினில் எனக்கே தந்த மெய்த் தந்தையே     1126
564         இணைஇலாக் களிப்புற்று  இருந்திட எனக்கே துணைஅடி சென்னியில் சூட்டிய தந்தையே     1128
565         ஆதி ஈறு அறியா அருள்  அரசாட்சியில் சோதிமா மகுடம் சூட்டிய தந்தையே               1130
566         எட்டிரண்டு  அறிவித்து எனைத்தனி ஏற்றிப் பட்டிமண் டபத்தில் பதித்தமெய்த் தந்தையே     1132
567         தங்கோல் அளவது தந்தருட் ஜோதிச் செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே                1134
568         தன்பொருள் அனைத்தையும் தன்அர சாட்சியில் என்பொருள் ஆக்கிய என்தனித் தந்தையே     1136
569         தன்வடி வனைத்தையும் தன்அர சாட்சியில் என்வடி வாக்கிய என்தனித் தந்தையே                1138
570         தன்சித் தனைத்தையும் தன்சமூ கத்தினில் என்சித் தாக்கிய என்தனித் தந்தையே                1140
571         தன்வச மாகிய தத்துவம் அனைத்தையும் என்வசம் ஆக்கிய என்உயிர்த் தந்தையே                1142
572         தன்கையில் பிடித்த தனிஅருட் ஜோதியை என்கையில் கொடுத்த என்தனித் தந்தையே     1144
573         தன்னையும் தன்அருட் சத்தியின் வடிவையும் என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே     1146
574         தன்இயல் என்இயல் தன்செயல் என்செயல் என்ன இயற்றிய என்தனித் தந்தையே                1148
575         தன்உரு என்உரு தன்உரை என்உரை என்ன இயற்றிய என்தனித் தந்தையே 1150
576         சதுரப் பேரருள் தனிப்பெருந் தலைவன்என்று எதிரற் றோங்கிய என்னுடைத் தந்தையே     1152
577         மனவாக் கறியா வரைப்பினில் எனக்கே இனவாக் கருளிய என்னுயிர்த் தந்தையே                1154
578         உணர்ந்து உணர்ந்து உணரினும் உணராப் பெருநிலை அணைந்திட எனக்கே அருளிய தந்தையே             1156
579         துரிய வாழ்வுடனே சுக பூரணம் எனும் பெரிய வாழ்வளித்த பெருந்தனித் தந்தையே                1158
580         ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே  1160
581         எவ்வகைத் திறத்தினும் எய்துதற் கரிதாம் அவ்வகை நிலைஎனக் களித்தநல் தந்தையே     1162
582         இனிப்பிற வாநெறி எனக்களித் தருளிய தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே     1164
583         பற்று அயர்ந் தஞ்சி பரிவு கண்டு அணைந்து எனைச் சற்றும் அஞ்சேல் எனத் தாங்கிய துணையே    1166
584         தளர்ந்த அத் தருணம் என் தளர்வெலாம் தவிர்த்து உள் கிளர்ந்திட எனக்குக் கிடைத்தமெய்த் துணையே        1168
585         துறைஇது வழிஇது துணிவிது நீசெயும் முறைஇது எனவே மொழிந்தமெய்த் துணையே    1170
586         எங்குறு தீமையும் எனைத்தொட ராவகை கங்குலும் பகலும்மெய்க் காவல்செய் துணையே    1172
587         வேண்டிய வேண்டிய விருப்பெலாம் எனக்கே ஈண்டிருந்து அருள்புரி என்னுயிர்த் துணையே    1174
588         இகத்தினும் பரத்தினும் எனக்கு இடர் சாராது அகத்தினும் புறத்தினும் அமர்ந்தமெய்த் துணையே    1176
589         அயர்வற எனக்கே அருள் துணை ஆகிஎன் உயிரினும் சிறந்த ஒருமைஎன் நட்பே    1178
590         அன்பினில் கலந்து எனது  அறிவினில் பயின்றே இன்பினில் அளைந்த என் இன்னுயிர் நட்பே 1180
591         நான்புரி வன எலாம் தான் புரிந் தெனக்கே வான் பத மளிக்க வாய்த்த நல் நட்பே   1182
592         உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு எள்ளுறு நெய்யில்என் உள்ளுறு நட்பே 1184
593         செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த குற்றமும் குணமாக் கொண்ட என் நட்பே                1186
594         குணங்குறி முதலிய குறித்திடாது எனையே அணங்கறக் கலந்த அன்புடை நட்பே 1188
595         பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல் கணக்கும் தீர்த்து  எனைக் கலந்த நல் நட்பே                1190
596         சவலைநெஞ் சகத்தின் தளர்ச்சியும் அச்சமும் கவலையும் தவிர்த்து எனைக் கலந்தநல் நட்பே    1192
597         களைப்பறிந்து எடுத்துக் கலக்கம் தவிர்த்தெனக்கு இளைப் பறிந்து உதவிய என்உயிர் உறவே             1194
598         தன்னைத் தழுவுறு தரஞ்சிறிது அறியா என்னைத் தழுவிய என்உயிர் உறவே              1196
599         மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும் எனக்குற வாகிய என்உயிர் உறவே       1198
600         துன்னும் அனாதியே சூழ்ந்தெனைப் பிரியாது என்உற வாகிய என்உயிர் உறவே    1200
601         என்றும்ஓர் நிலையாய் என்றும்ஓர் இயலாய் என்றும்உள் ளதுவாம் என்தனிச் சத்தே                1202
602         அனைத்துலகு அவைகளும் ஆங்காங்கு உணரினும் இனைத்தென அறியா என்தனிச் சத்தே 1204
603         பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும் இதுஎனற்கு  அரிதாம் என்தனிச் சத்தே                1206
604         ஆகம முடிகளும் அவைபுகல் முடிகளும் ஏகுதற்கு அரிதாம் என்தனிச் சத்தே             1208
605         சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே இத்தகை வழுத்தும் என்தனிச் சத்தே      1210
606         துரியமும் கடந்ததோர் பெரியவான் பொருள்என உரைசெய் வேதங்கள் உன்னும் மெய்ச் சத்தே             1212
607         அன்றதன் அப்பால் அதன்பரத்து அதுதான் என்றிட நிறைந்த என் தனிச் சத்தே        1214
608         என்றும்உள் ளதுவாய் எங்கும்ஓர் நிறைவாய் என்றும் விளங்கிடும் என் தனிச் சத்தே                1216
609         சத்திகள் பலவாய் சத்தர்கள் பலவாய் இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே             1218
610         தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய் இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே              1220
611         படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய் இடிவற விளங்கிடும் என்தனிச் சித்தே       1222
612         மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய் ஏற்பட விளக்கிடும் என்தனிச் சித்தே    1224
613         உயிர்வகை பலவாய் உடல்வகை பலவாய் இயலுற விளக்கிடும் என்தனிச் சித்தே 1226
614         அறிவவை பலவாய் அறிவன பலவாய் எறிவற விளக்கிடும் என்தனிச் சித்தே            1228
615         நினைவவை பலவாய் நினைவன பலவாய் இனைவற விளக்கிடும் என்தனிச் சித்தே                1230
616         காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய் ஏட்சியின் விளக்கிடும் என்தனிச் சித்தே                1232
617         செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய் எய்வற விளக்கிடும் என்தனிச் சித்தே  1234
618         அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும் எண்தர விளக்கிடும் என்தனிச் சித்தே                1236
619         எல்லாம் வல்ல சித்து என மறை புகன்றிட எல்லாம் விளக்கிடும் என்தனிச் சித்தே 1238
620         ஒன்றதில் ஒன்றென்று உரைக்கவும் படாதாய் என்றும் ஓர் படித்தாம் என்தனி இன்பே                1240
621         இதுஅது என்னா இயலுடை அதுவாய் எதிர்அற நிறைந்த என்தனி இன்பே     1242
622         ஆக்குறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்துமேல் ஏக்கற நிறைந்த என்தனி இன்பே            1244
623         அறிவுக்கு அறிவினில் அதுவது அதுவாய் எறிவற்று  ஓங்கிய என்தனி இன்பே            1246
624         விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை இடைஇடை ஓங்கிய என்தனி இன்பே                1248
625         இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும் எம்மையும் நிரம்பிடும் என்தனி இன்பே            1250
626         முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் எத்திறத் தவர்க்குமாம் என்தனி இன்பே 1252
627         எல்லா நிலைகளின் எல்லா உயிர்உறும் எல்லா இன்புமாம் என்தனி இன்பே 1254
628         கரும்புறு சாறும் கனிந்தமுக் கனியின் விரும்புறும் இரதமும் மிக்கதீம் பாலும்          1256
629         குணங்கொள் கோல்தேனும் கூட்டிஒன் றாக்கி மணங்கொளப் பதஞ்செய் வகையுற இயற்றிய       1258
630         உணவெனப் பல்கால் உரைக்கினும் நிகரா வணம்உறும் இன்ப மயமே அதுவாய்க்                 1260
631         கலந்து அறிவுருவாய்க் கருதுதற்கு அரிதாய் நலந்தரு விளக்கமும் நவில்அரும் தண்மையும்               1262
632         உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள் உள்ளதாய் என்றன் உயிர்உளம் உடம்புடன்                 1264
633         எல்லாம் இனிப்ப இயலுறு சுவை அளித்து எல்லாம் வல்லசித்து இயற்கைய தாகிச்                 1266
634         சாகா வரமும் தனித்த பேரறிவும் மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்     1268
635         செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும் மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்                 1270
636         பூரண வடிவாய்ப் பொங்கிமேல் ததும்பி ஆரண முடியுடன் ஆக முடியும்          1272
637         கடந்தெனது அறிவாம் கனமேல் சபைநடு நடந்திகழ் கின்ற மெய்ஞ் ஞான ஆரமுதே                 1274
638         சத்திய அமுதே தனித்திரு அமுதே நித்திய அமுதே நிறைசிவ அமுதே                1276
639         சச்சிதா னந்தத் தனிமுதல் அமுதே மெய்ச் சிதா காச விளைவருள் அமுதே   1278
640         ஆனந்த அமுதே அருள்ஒளி அமுதே தானந்த மில்லாத் தத்துவ அமுதே              1280
641         நவநிலை தரும்ஓர் நல்லதெள் ளமுதே சிவநிலை தனிலே திரண்டஉள் ளமுதே         1282
642         பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வான் அமுதே            1284
643         அகம்புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம் உகந்தநான் கிடத்தும் ஓங்கிய அமுதே       1286
644         பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே தனிமுத லாய சிதம்பர அமுதே      1288
645         உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே அலகிலாப் பெருந்திறல் அற்புத அமுதே            1290
646         அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள் பண்டமும் காட்டிய பரம்பர மணியே                1292
647         பிண்டமும் அதில்உறு பிண்டமும் அவற்றுள பண்டமும் காட்டிய பராபர மணியே                 1294
648         நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே       1296
649         விண்பதம் அனைத்தும் மேற்பத முழுவதும் கண்பெற நடத்தும் ககனமா மணியே                 1298
650         பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும் சார்புற நடத்தும் சரஒளி மணியே            1300
651         அண்ட கோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக் கண்டு கொண்டிட ஒளிர் கலைநிறை மணியே         1302
652         சராசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும் விராவியுள் விளங்கும் வித்தக மணியே         1304
653         மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும் தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே     1306
654         தாழ்வெலாம் தவிர்த்துச் சகமிசை அழியா வாழ்வெனக் களித்த வளர்ஒளி மணியே                 1308
655         நவமணி முதலிய நலம்எலாம் தரும்ஒரு சிவமணி எனும்அருட் செல்வமா மணியே                1310
656         வான்பெறற் கரிய வகைஎலாம் விரைந்த நான்பெற அளித்த நாதமந் திரமே              1312
657         கற்பம் பலபல கழியினும் அழியாப் பொற்புற அளித்த புனிதமந் திரமே          1314
658         அகரமும் உகரமும் அழியாச் சிகரமும் வகரமும் ஆகிய வாய்மைமந் திரமே               1316
659         ஐந்தென எட்டென ஆறென நான்கென முந்துறு மறைமுறை மொழியு மந்திரமே   1318
660         வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும் ஓதநின்று உலவா தோங்கு மந்திரமே            1320
661         உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே                1322
662         சித்திக்கு மூலமாம் சிவமருந் தெனஉளம் தித்திக்கும் ஞானத் திருவருள் மருந்தே   1324
663         இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும் சிறந்த வல்லப முறு திருவருண் மருந்தே     1326
664         மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே         1328
665         நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும் உரைதரு பெருஞ்சீர் உடையநல் மருந்தே                1330
666         என்றே என்னினும் இளமையோ டிருக்க நன்றே தரும்ஒரு ஞானமா மருந்தே               1332
667         மலப்பிணி தவிர்த்தருள் வலந் தருகின்ற தோர் நலத்தகை அதுஎன நாட்டிய மருந்தே                 1334
668         சிற்சபை நடுவே திருநடம் புரியும் அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே      1336
669         இடைஉறப் படாத இயற்கை விளக்கமாய்த் தடைஒன்றும் இல்லாத் தகவுடை யதுவாய்                 1338
670         மாற்றிவை என்ன மதித்தளப் பரிதாய் ஊற்றமும் வண்ணமும் ஒருங்குடை யதுவாய்க்                1340
671         காட்சிக்கு இனிய நற் கலையுடை அதுவாய் ஆட்சிக் குரிய பன் மாட்சியும் உடைத்தாய்க்           1342
672         கைதவர் கனவினும் காண்டற் கரிதாய்ச் செய்தவப் பயனாம் திருவருள் வலத்தால்                1344
673         உளம்பெறும் இடம்எலாம் உதவுக எனவே வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே 1346
674         புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும் வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே                1348
675         மும்மையும் தரும்ஒரு செம்மையை உடைத்தாய் இம்மையே கிடைத்திங்கு இலங்கிய பொன்னே    1350
676         எடுத்தெடுத் துதவினும் என்றும் குறையா தடுத்தடுத் தோங்குமெய் அருளுடைப் பொன்னே    1352
677         தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடு வேம்எனக் கிளர்ந்திட உரைத்துக் கிடைத்தசெம் பொன்னே    1354
678         எண்ணிய தோறும் இயற்றுக என்றெனை அண்ணிஎன் கரத்தில் அமர்ந்தபைம் பொன்னே    1356
679         நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டுப் போகேம் என எனைப் பொருந்திய பொன்னே    1358
680         எண்ணிய எண்ணியாங் கெய்திட எனக்குப் பண்ணிய தவத்தால் பழுத்தசெம் பொன்னே    1360
681         விண்ணியல் தலைவரும் வியந்திட எனக்குப் புண்ணியப் பயனால் பூத்தசெம் பொன்னே    1362
682         நால்வகை நெறியினும் நாட்டுக எனவே பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே    1364
683         எழுவகை நெறியினும் இயற்றுக எனவே முழுவகை காட்டி முயங்கிய பொன்னே 1366
684         எண்ணிய படிஎலாம் இயற்றுக என்றெனைப் புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே             1368
685         ஊழி தோ றூழி உலப்புறாது ஓங்கி வாழிஎன் றெனக்கு வாய்த்தநல் நிதியே 1370
686         இதமுற ஊழிதோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு உதவினும் உலவாது ஓங்குநல் நிதியே             1372
687         இருநிதி எழுநிதி இயல்நவ நிதிமுதல் திருநிதி எல்லாம் தரும்ஒரு நிதியே        1374
688         எவ்வகை நிதிகளும் இந்த மா நிதியிடை அவ்வகை கிடைக்கும்என் றருளிய நிதியே                 1376
689         அற்புதம் விளங்கும் அருட்பெரு நிதியே கற்பனை கடந்த கருணைமா நிதியே          1378
690         நற்குண நிதியே சற்குண நிதியே நிர்க்குண நிதியே சிற்குண நிதியே               1380
691         பளகிலாது  ஓங்கும் பளிக்குமா மலையே வளம்எலாம் நிறைந்த மாணிக்க மலையே                 1382
692         மதியுற விளங்கும் மரகத மலையே வதிதரு பேரொளி வச்சிர மலையே           1384
693         உரைமனங் கடந்தாங்கு ஓங்குபொன் மலையே துரியமேல் வெளியில் சோதிமா மலையே        1386
694         புற்புதம் திரைநுரை புரைமுதல் இலதோர் அற்புதக் கடலே அமுதத்தண் கடலே      1388
695         இருட்கலை தவிர்த்தொளி எல்லாம் வழங்கிய அருட்பெருங் கடலே ஆனந்தக் கடலே                1390
696         பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே         1392
697         என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்துளம் நன்றுற விளங்கிய நந்தனக் காவே 1394
698         சேற்றுநீர் இன்றி நல் தீஞ்சுவை தரும்ஓர் ஊற்றுநீர் நிரம்ப உடைய பூந் தடமே            1396
699         கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே            1398
700         களைப்பறக் கிடைத்த கருணைநன் நீரே இளைப்பற வாய்த்த இன்சுவை உணவே                 1400
701         தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே தென்னை வான் பலத்தில் திருகு தீம் பாலே                 1402
702         நீர்நசை தவிர்க்கும் நெல்லியங் கனியே வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே                 1404
703         கட்டுமாம் பழமே கதலிவான் பழமே இட்டநற் சுவைசெய் இலந்தையங் கனியே     1406
704         புனிதவான் தருவில் புதுமையாம் பலமே கனிஎலாம் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே                1408
705         இதந்தரு கரும்பில் எடுத்ததீஞ் சாறே பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே              1410
706         சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே ஏலவே நாவுக்கு இனிய கற்கண்டே    1412
707         உலப்புறா தினிக்கும் உயர்மலைத் தேனே கலப்புறா மதுரம் கனிந்தகோற் றேனே                1414
708         நவைஇலா தெனக்கு நண்ணிய நறவே சுவைஎலாம் திரட்டிய தூயதீம் பதமே            1416
709         பதம்பெறக் காய்ச்சிய பசு நறும் பாலே இதம்பெற உருக்கிய இளம்பசு நெய்யே     1418
710         உலர்ந்திடா தென்றும் ஒரு படித் தாகி மலர்ந்து நல் வண்ணம் வயங்கிய மலரே        1420
711         இகந்தரு புவிமுதல் எவ்வுல குயிர்களும் உகந்திட மணக்கும் சுகந்த நல் மணமே     1422
712         யாழுறும் இசையே இனியஇன் இசையே ஏழுறும் இசையே இயல்அருள் இசையே                 1424
713         திவள்ஒளிப் பருவம் சேர்ந்த நல் லவளே அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே 1426
714         நாதநல் வரைப்பின் நண்ணிய பாட்டே வேத கீதத்தில் விளை திருப் பாட்டே               1428
715         நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே               1430
716         நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே எம்பலம் ஆகிய அம்பலப் பாட்டே             1432
717         என்மனக் கண்ணே என்அருட் கண்ணே என்னிரு கண்ணே என்கணுள் மணியே    1434
718         என்பெருங் களிப்பே என்பெரும் பொருளே என்பெருந் திறலே என்பெருஞ் செயலே                 1436
719         என்பெருந் தவமே என்தவப் பலனே என்பெருஞ் சுகமே என்பெரும் பேறே      1438
720         என்பெரு வாழ்வே என்றன்வாழ் முதலே என்பெரு வழக்கே என்பெருங் கணக்கே   1440
721         என்பெரு நலமே என்பெருங் குலமே என்பெரு வலமே என்பெரும் புலமே         1442
722         என்பெரு வரமே என்பெருந் தரமே என்பெரு நெறியே என்பெரு நிலையே      1444
723         என்பெருங் குணமே என்பெருங் கருத்தே என்பெருந் தயவே என்பெருங் கதியே       1446
724         என்பெரும் பதியே என்னுயிர் இயலே என்பெரு நிறைவே என்தனி அறிவே    1448
725         தோலெலாம் குழைந்திடச் சூழ்நரம்பு அனைத்தும் மேலெலாம் கட்டவை விட்டுவிட்டு இயங்கிட       1450
726         என்பெலாம் நெக்குநெக்கு இயலிடை நெகிழ்ந்திட மென்புடைத் தசைஎலாம் மெய்உறத் தளர்ந்திட        1452
727         இரத்தம் அனைத்தும்உள் இறுகிடச் சுக்கிலம் உரத்திடை பந்தித்து ஒருதிர ளாயிட                 1454
728         மடல்எலாம் மூளை மலர்ந்திட அமுதம் உடல்எலாம் ஊற்றெடுத் தோடி நிரம்பிட    1456
729         ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத் தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட        1458
730         உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக் கண்ணில் நீர் பெருகிக் கால்வழிந் தோடிட           1460
731         வாய்துடித்து அலறிட வளர்செவித் துளைகளில் கூயிசைப் பொறிஎலாம் கும்மெனக் கொட்டிட      1462
732         மெய்எலாம் குளிர்ந்திட மென் மார் பசைந்திடக் கைஎலாம் குவிந்திடக் கால்எலாம் சுலவிட            1464
733         மனங்கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட இனம்பெறு சித்தம் இயைந்து களித்திட       1466
734         அகங்காரம் ஆங்காங்கு  அதிகரிப்பு அமைந்திடச் சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட     1468
735         அறிவுரு அனைத்தும் ஆனந்த மாயிடப் பொறிஉறும் ஆன்மதற் போதமும் போயிடத்                 1470
736         தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கு ஒழிந்திடச் சத்துவம் ஒன்றே தனித்துநின் றோங்கிட     1472
737         உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திட அலகிலா அருளின் ஆசைமேற் பொங்கிட     1474
738         என்னுளத் தெழுந்து உயிரெல்லாம் மலர்ந்திட என்னுளத் தோங்கிய என் தனி அன்பே                 1476
739         பொன்னடி கண்டு அருட் புத்தமுது உணவே என்னுளத் தெழுந்த என்னுடை அன்பே                 1478
740         தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால் என்னை வேதித்த என்தனி அன்பே             1480
741         என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து என்னுளே விரிந்த என்னுடை அன்பே                1482
742         என்னுளே விளங்கி என்னுளே பழுத்து என்னுளே கனிந்த என்னுடை அன்பே 1484
743         தன்னுளே நிறைவுறு தரம்எலாம் அளித்தே என்னுளே நிறைந்த என்தனி அன்பே    1486
744         துன்புள அனைத்தும் தொலைத்தென துருவை இன்புரு வாக்கிய என்னுடை அன்பே                 1488
745         பொன்னுடம்பு  எனக்குப் பொருந்திடும் பொருட்டாய் என்னுளங் கலந்த என்தனி அன்பே            1490
746         தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி என்வசங் கடந்த என்னுடை அன்பே     1492
747         தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே என்னுளே பொங்கிய என்தனி அன்பே    1494
748         அருளொளி விளங்கிட ஆணவம் எனும்ஓர் இருளற என்உளத் தேற்றிய விளக்கே      1496
749         துன்புறு தத்துவத் துரிசெலாம் நீக்கிநல் இன்புற என்உளத் தேற்றிய விளக்கே           1498
750         மயலற அழியா வாழ்வுமேன் மேலும் இயலுற என்உளத் தேற்றிய விளக்கே   1500
751         இடுவெளி அனைத்தும் இயல்ஒளி விளங்கிட நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே 1502
752         கருவெளி அனைத்தும் கதிர் ஒளி விளங்கிட உருவெளி நடுவே ஒளிர்தரு விளக்கே                 1504
753         தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட ஏற்றிய ஞான இயல்ஒளி விளக்கே             1506
754         ஆகம முடிமேல் அருள்ஒளி விளங்கிட வேகமது அறவே விளங்கொளி விளக்கே       1508
755         ஆரியர் வழுத்திய அருள்நிலை அனாதி காரியம் விளக்கும்ஓர் காரண விளக்கே    1510
756         தண்ணிய அமுதே தந்து என துளத்தே புண்ணியம் பலித்த பூரண மதியே      1512
757         உய்தர அமுதம் உதவிஎன் உளத்தே செய்தவம் பலித்த திருவளர் மதியே         1514
758         பதிஎலாம் தழைக்கப் பதம்பெறும் அமுத நிதிஎலாம் அளித்த நிறை திரு மதியே    1516
759         பால்எனத் தண் கதிர் பரப்பி எஞ்ஞான்றும் மேல் வெளி விளங்க விளங்கிய மதியே                 1518
760         உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட வயங்கிய கருணை மழைபொழி மழையே                 1520
761         என்னையும் பணிகொண்டு என்னுளே நிரம்ப மன்னிய கருணை மழைபொழி மழையே        1522
762         உளங்கொளும் எனக்கே உவகைமேற் பொங்கி வளங்கொளக் கருணை மழைபொழி மழையே        1524
763         நலந்தர உடல்உயிர் நல்அறி வெனக்கே மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே                 1526
764         தூய்மையால் எனது துரிசெலாம் நீக்கிநல் வாய்மையால் கருணை மழைபொழி மழையே        1528
765         வெம்மல இரவது விடி தருணம் தனில் செம்மையில் உதித்து உளந் திகழ்ந்த செஞ் சுடரே                1530
766         திரைஎலாம் தவிர்த்துச் செவ்விஉற் றாங்கே வரைஎலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே                 1532
767         அலகிலாத் தலைவர்கள் அரசுசெய் தத்துவ உலகெலாம் விளங்க ஓங்குசெஞ் சுடரே                 1534
768         முன்னுறு மலஇருள் முழுவதும் நீக்கியே என்னுள வரைமேல் எழுந்தசெஞ் சுடரே     1536
769         ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த ஜோதியாய் என்உளம் சூழ்ந்தமெய்ச் சுடரே     1538
770         உள்ஒளி ஓங்கிட உயிர்ஒளி விளங்கிட வெள்ஒளி காட்டிய மெய்அருட் கனலே            1540
771         நலங்கொளப் புரிந்திடு ஞான யாகத்திடை வலம் சுழித் தெழுந்து வளர்ந்த மெய்க் கனலே             1542
772         வேதமும் ஆகம விரிவும் பரம்பர நாதமும் கடந்த ஞானமெய்க் கனலே             1544
773         எண்ணிய எண்ணிய எல்லாந் தர எனுள் நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே                 1546
774         வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு நலம்எலாம் அளித்த ஞானமெய்க் கனலே 1548
775         இரவொடு பகலிலா இயல்பொது நடமிடு பரம வேதாந்தப் பரம்பரஞ் சுடரே 1550
776         வரநிலை பொதுவிடை வளர்திரு நடம்புரி பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே                1552
777         சமரச சத்தியச் சபையில் நடம்புரி சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே     1554
778         சபை எனது உளம் எனத் தான் அமர்ந் தெனக்கே அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி               1556
779         மருள்எலாம் தவிர்த்து வரம்எலாம் கொடுத்தே அருளமுது அருத்திய அருட்பெருஞ் ஜோதி               1558
780         வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர் ஆழிஒன் றளித்த அருட்பெருஞ் ஜோதி        1560
781         என்னையும் பொருள்என எண்ணிஎன் உளத்தே அன்னையும் அப்பனும் ஆகிவீற் றிருந்து            1562
782         உலகியல் சிறிதும் உளம்பிடி யாவகை அலகில்பேர் அருளால் அறிவது விளக்கிச் 1564
783         சிறுநெறி செல்லாத் திறன்அளித்து அழியாது உறுநெறி உணர்ச்சி தந்து  ஒளிஉறப் புரிந்து              1566
784         சாகாக் கல்வியின் தரம்எலாம் உணர்த்திச் சாகா வரத்தையும் தந்துமேன் மேலும்                 1568
785         அன்பையும் விளைவித்து அருட்பேர் ஒளியால் இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்               1570
786         ஓர்உரு ஆக்கி யான் உன்னிய படிஎலாம் சீர்உறச் செய்து உயிர்த் திறம்பெற அழியா                 1572
787         அருளமுது அளித்தனை அருள்நிலை ஏற்றினை அருள்அறி வளித்தனை அருட்பெருஞ் ஜோதி               1574
788         வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர் அல்கல்இன் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி               1576
789         உலகுயிர்த் திரள்எலாம் ஒளிநெறி பெற்றிட இலகும்ஐந் தொழிலையும் யான்செயத் தந்தனை       1578
790         போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி                 1580
791         மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல்எனக் களித்தனை                 1582
792         போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி                 1584
793         சித்திகள் அனைத்தையும் தெளிவித் தெனக்கே சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை       1586
794         போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி                 1588
795         உலகினில் உயிர்களுக்கு உறும்இடை யூறெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க                 1590
796         சுத்தசன் மார்க்கச் சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை       1592
797         போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி                 1594
798         அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி                 1596
அருட்பெருஞ்சோதி அகவல் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்